நுவரெலியாவை குறி வைக்கும் கோட்டாபய அணி

Report Print Steephen Steephen in அரசியல்

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொடுக்க போவதாக ராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்ஹேன அஹினவாராம விகாரையில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த மக்களின் ஆதரவின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் 127 ஆசனங்களை கைப்பற்ற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றால் இம்முறை பொதுத் தேர்தலில் 15 ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

நான் ஆரம்பித்த சமூர்த்தி நிவாரண திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும் ரணில் விக்ரமசிங்க அழித்து விட்டார்.

சமூர்த்தி கட்டமைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...