பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து சேனாநாயக்க தேர்தலில் போட்டியிட உள்ளார்.

தற்போது வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வரும் அவர் எதிர்காலத்தில் இலங்கை திரும்பி தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க உள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹேஸ் சேனாநாயக்க குறிப்பிடத்தக்களவு வாக்குகளை பெற்றிருந்தார்.

Latest Offers

loading...