புதிய கூட்டணி பூச்சாண்டியே! கோட்டாபய அணி பரிகாசம்

Report Print Rakesh in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியை பொதுத்தேர்தலில் மண்கவ்வ வைப்போம் என்று தெரிவித்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பெருங் கூட்டணியைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்தோம். தற்போது பரந்துபட்ட அரசியல் கூட்டணி என்று கூறிக்கொண்டு அதே அணிதான் பொதுத் தேர்தலுக்குத் தயாராகின்றது.

ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கியமாக இருந்தவர்கள் இன்று பல அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். கூட்டணி பலவீனமடைந்துவிட் டது.

பொதுத்தேர்தலில் எமது பரந்துபட்ட கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சியை இலகுவில் தோற்கடிக்கும். ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் பலமான ஆட்சி அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...