பெரும்பான்மை கிடைத்தால் அடிப்படைவாதிகள் அல்லாத அரசாங்கம் - கெஹெலிய ரம்புக்வெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் தனியான அரசாங்கத்தை அமைக்க முடிந்தால், அடிப்படைவாதிகள் இல்லாத மக்களின் ஆட்சியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது தரப்புக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், அடுத்த 100 ஆண்டுகளுக்கு அடிப்படைவாதத்திற்கு இடம் இருக்காது. அத்துடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட மாட்டாது.

நாட்டில் 10 லட்சம் வாக்குகள் நடு நிலையான வாக்காளர்கள் எனக் கூறினார். என்னை பொறுத்தவரை 40 லட்சம் நடுநிலையான வாக்காளர்கள் இருக்கின்றனர். திறமையான மற்றும் புத்திசாலிகள் நிறைந்த உலகத்துடன் சமமாக இருந்து செயற்பட கூடிய அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

22 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளோம். ஆனால் ஒரு விளம்பரமும் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆத்ம கௌரவம் பூஜ்ஜிய நிலைக்கு சென்றுள்ளது.

மற்றவர்களிடம் கையேந்தாத, அடிப்படைவாதிகளிடம் அடிப்பணியாத அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அதற்காக எமக்கு உதவுங்கள் எனவும் ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...