மட்டக்களப்பில் உதயமாகியது புதிய அரசியல் கட்சி

Report Print Rusath in அரசியல்

இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், நிர்வாகக் கட்டமைப்புக்கள், எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கவுரைகள் இடம்பெற்றன.

இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவராக முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம், செயலாளர் கணபதிப்பிள்ளை சிறிஸ்குமார், பொருளாளர் தருமரெட்ணம் தயானந்தன், தேசிய அமைப்பாளர் போராசியரியர் ம.செல்வராசா, பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் இணைப்பாளர்கள் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்குப் பல்கலைக் கழக பேராசிரியர் ம.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...