ஐ.தே.கட்சியின் தோல்விக்கு காரணம் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணி மற்றும் புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச இல்லாமல் போட்டியிட்டு பலனில்லை என்பதை கட்சி உணர்ந்துள்ளது. அவரே நாட்டில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினரின் பிரபலமான தலைவர் என்பதையும் கட்சி அறிந்துள்ளது. நாங்கள் புதிய கூட்டணியின் கீழ் புதிய சின்னத்தில் போட்டியிடுவோம்.

கட்சியின் சின்னத்தை அடுத்த வாரம் நாங்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்துவோம். தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை என்றால், நாங்கள் சஜித் தலைமையில் தனியான கூட்டணியை அமைத்து அடுத்த தேர்தல்களில் போட்டியிடுவோம்.

ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக இருந்தாலும் அனைவரும் புதிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக வேண்டுமாயின் ரணில் வேட்பாளர்களை நிறுத்த முடியும். அவர் ஜனநாயகம் பற்றி பேசுகிறார் ஆனால் அதன்படி நடந்துக்கொள்வதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு காரணம் ரணில் விக்ரமசிங்க என பலர் நினைக்கின்றனர். நாங்களும் அதனையே நினைக்கின்றோம். ரணில் விக்ரமசிங்க 26 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையடைகின்றேன் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...