மொட்டுச் சின்னம் நாற்காலியாக மாறியது

Report Print Steephen Steephen in அரசியல்

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பெயரை ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என பெயர் மாற்றுதல் மற்றும் திருத்தப்பட்ட யாப்பின் விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் அடுத்த வாரம் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று சபை கூடி முன்னணியின் பெயரை ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி மாற்றவும் அதற்கு அமைய யாப்பில் திருத்தங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் சின்னமான நாற்காலி சின்னம் புதிய கூட்டணியின் சின்னமாக இருப்பதால் அது குறித்து விசேட அறிவிப்பு எதனையும் செய்ய தேவையில்லை.

தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கையளித்த பின்ன நிறைவேற்றுச் சபைக் கூடி புதிய அதிகரிகள் நியமிக்கப்படுவார் எனவும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...