சட்டங்களை மதிக்காத மனிதன் நாட்டுப்பற்றாளனாக இருக்க முடியாது!

Report Print Varunan in அரசியல்

ஒரு மனிதன் நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது என்றும் மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

எனவே சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக மாற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை - சாய்ந்தமருது, அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

மாணவர்களிடத்தில் திறமையை கண்டுபிடித்து அவர்களிடம் என்னென்ன தகுதிகள் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிப்பவர் தான் திறமையான ஆசிரியர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது.

அதேபோன்றுதான் மாணவர்களுக்கு எவ்வாறான திறமை காணப்படுகிறது என்பதை கண்டுபிடித்து அவற்றுக்கும் ஏற்றாற்போல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கல்வி நுட்பத்தை ஊட்ட வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

மாணவர்களுக்கு ஏற்றவகையில், கல்வியை தெரிவு செய்ய வேண்டிய வேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவர்களிடையே சிறப்புத் தேர்ச்சி இருக்கின்றது என்பதை அடையாளம் காண முடியும் அவ்வாறு தான் என்னையும் ஒரு ஆசிரியர் இனங்கண்டு சட்டத்துறையில் ஈடுபடுத்தினார்.

ஒவ்வொருவருக்கும் மொழி பிரதானமானது அந்தவகையில் நாம் தமிழ் மொழியை பிரதானமாக கொண்டாலும் சிங்கள மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதுதான் இந்த நாட்டின் முதல் மொழி. சிங்களத்தை பிரதானமாக கொண்ட மக்கள் பெரும்பான்மை மக்கள் இருக்கின்றனர்.

சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச் சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் ஆக மாற வேண்டும். அதற்கு இந்த நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும். ஒரு மனிதன் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது.

ஏனெனில் சட்டத்தை மதிக்கவில்லை சட்டத்தை மதிப்பவன் தான் இந்த மண்ணை இந்த நாட்டை நேசிக்கும். நாங்கள் நல்ல பிரஜையாக இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...