சஜித் தலைமையில் புதிய பெயரில் கூட்டணி அமைக்கும் ஐக்கிய தேசிய முன்னணி

Report Print Gokulan Gokulan in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பரந்த கூட்டணியின் சார்பிலேயே போட்டியிடுவது எனவும், ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரை தவிர்த்து புதிய பெயரில் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின்பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்,

1. ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு ஏற்றுக்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

2. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு பரந்த கூட்டணியின் சார்பிலேயே நாம்அனைவரும் போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரைத் தவிர்த்து புதியபெயரில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணியின் பெயர், சின்னம், யாப்பு ஆகியவைஇன்னமும் சில தினங்களில் அறிவிக்கப்படும்.

3. கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை, இன்றைய கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள்ஆராய்ந்து முடிவு செய்தனர்.

4. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைக்குழுவின் தலைவராகவும் சஜித் பிரேமதாஸ செயற்படுவார். இதில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், ஐ.தே.கவின்பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

5. ஒவ்வொரு பங்காளிக் கட்சியும் கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடும்.

6. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணியின் வேட்பாளர் நியமனசபையின் தலைவராகவும் சஜித் பிரேமதாஸ செயற்படுவார். இந்தச் சபையில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், ஐ.தே.கவின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

7. இன்றைய ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் நியமனம் வழங்கப்படும். ஒவ்வொரு பங்காளிக் கட்சியும் 2015ஆம் ஆண்டுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட நியமனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும். மேலதிக வேட்பாளர் நியமனங்கள் தொடர்பில் பேச்சுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

8. ஐ.தே.க. மற்றும் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில், கூட்டணி உறுப்பினர்களாகச் செயற்படுவார்கள். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினரும் குறிப்பிட்ட கட்சிகளின் ஒழுங்கு கோவையின் கீழ் செயற்படுவார்கள். ஒரு கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஓர் அங்கத்தவரை இன்னொரு பங்காளிக் கட்சி எந்தச் சந்தர்ப்பத்திலும் உள்வாங்கமுடியாது.

Latest Offers

loading...