கூட்டணியில் இணைத் தலைமைகள் இல்லை - ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியில் இணைத் தலைவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைத்தலைவர்களுக்கு இணங்காது. முழு நாடும் ஏற்றுக்கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவே கூட்டணியின் தலைவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஏற்கனவே கூட்டணியில் உள்ளன.

நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளையும் இணைத்து விரிவான கூட்டணியை உருவாக்குவோம் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் உத்தேச கூட்டணியின் இணைத்தலைவர் பதவி முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையின் கீழ் மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட வேண்டும் அல்லது தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.

Latest Offers

loading...