மக்களுக்கு சேவையாற்ற தேவையான பின்னணியை தற்போதைய ஜனாதிபதி உருவாக்கியுள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த கால தவறுகளை புரிந்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற தேவையான பின்னணியை தற்போதைய ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வீடமைப்புக்கு என்று கூறி வீடமைப்பு பிரசாரத்திற்காக ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி தற்போதைய அரசாங்கம் வீடுகளை நிர்மாணித்து வருகிறது.

அரசாங்கம் எந்த பிரசாரங்களையும் செய்யாது வீடுகளை நிர்மாணித்து வருகிறது.

நாங்களும் பிரசாரங்களை செய்து கட்அவுட்களை வைத்து செயற்பட்டதால் மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பினர்.

நாங்கள் தற்போது தவறுகளை புரிந்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றோம். மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை தவிர வேறு எதனையும் தற்போதைய அரசாங்கம் செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...