ஜனாதிபதியின் உரையை பாராட்டும் மங்கள சமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி குறிப்பு ஒன்றை இட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உரை மிகவும் சிறப்பான உரை எனவும் கதையை போல் வேலையையும் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,

“ஜனாதிபதி ஆற்றிய உரை மிகவும் சிறப்பானது. தற்போது அவர் கதையை போல் வேலை செய்ய வேண்டும்.

வலுவான தலைவர் என்பவர் ஜனநாயக வரையறைக்குள் கடினமான தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் நபர்.

1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் வந்த தலைவர்கள் மிகவும் சிறந்த கதைகளை பேசியுள்ளனர்.

தற்போது வேலை செய்வதற்கான காலம் வந்துள்ளது” என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers