இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை கிடையாது! இந்திய மத்திய அரசு அறிவிப்பு

Report Print Malar in அரசியல்

சென்னையில் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதன் பின்னர், இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை கிடையாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராஜ்யசபாவில் புதுச்சேரி அ.தி.மு.க எம்.பியாயன கோகுலகிருஷ்ணன், இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அரசியலமைப்பு சாசனத்தின் 9ஆவது சரத்தின் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க இயலாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக எந்தவொரு ஒப்பந்தம் செய்வதற்கும் திட்டமும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் பதிலளித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருவதுடன், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதேநேரத்தில் ஈழத் தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அ.தி.மு.க வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.