ரஞ்சனின் குரல் பதிவுகளை கோரும் ஹிருணிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பதிவு செய்த குரல் பதிவுகள் நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, குரல் பதிவுகளை கோரினாலும் வழங்க மறுப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தன்னையும் சம்பந்தப்படுத்தியுள்ளதால், அதனை தனக்கு வழங்குமாறும், அதற்கு கட்சித் தலைவர்களின் அனுமதி அவசியம் என கூறுவதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, குரல் பதிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers