அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று இதனை அறிவித்துள்ளார்.

அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சுசந்த புஞ்சிநிலமே, தாரக பாலசூரிய, காஞ்ச விஜேசேகர, டிலான் பெரேரா ஆகியோர் ஆளும் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர எதிர்க்கட்சியின் சார்பில் பிமல் ரத்நாயக்க, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், ஆசு மாரசிங்க, மொஹமட் இஸ்மையில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...