சர்வதேச உயர் பதவிகளுக்கு காத்திருக்கும் ரணில்!

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச உயர் பதவிகள் பலவற்றிற்கு விண்ணப்பித்துள்ளதாக கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச பதவிகள் குறித்து ரணில் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான பதவிகளில் ஒன்று கிடைப்பதாக உறுதியான பின்னர், கட்சியின் தலைமைத்துவத்தை கைவிடுவதாக கூறப்படுகின்றது.

பொதுநலவாய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளருக்கான உப ஆணையாளர் பதவிகள் தொடர்பிலேயே ரணில் அதிக அவதானம் செலுத்தியுள்ளார்.

எப்படியிருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு 2024ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைமைத்துவத்தில் நீடிக்க கட்சியின் அரசியல் யாப்புக்கு அமைய அதிகாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...