மின்சாரத்தடையை தடுக்க கடனை பெற இலங்கை மின்சார சபை தீர்மானம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் மின்சாரத்தடையை தடுக்க 10 பில்லியன் ரூபா கடனை பெற்றுக்கொள்ள இலங்கை மின்சார சபை எதிர்பார்க்கின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 88.9 பில்லியன் ரூபா கொடுப்பனவு செலுத்தப்படாமை காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது விநியோகத்தை நிறுத்திக் கொண்டது.

இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமையன்று நாடு முழுவதும் முன்கூட்டி அறிவிக்கப்படாமல் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவேண்டிய கடனை செலுத்த வங்கிகளின் பணம் பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 பில்லியன் ரூபா கடனை பெற்றுக்கொள்வதற்காக நாளை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

சக்திவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் இலங்கை மின்சார சபை, பெற்றோலிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கான 50 வீத நிலுவையை செலுத்திய பின் இடையறாத வகையில் மின்சாரசபைக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு ஏற்கனவே இரண்டு தரப்பும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

Latest Offers

loading...