விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தானே இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது! பிரதமர் தெரிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெ ஹிந்து டைம்ஸூக்கு நேற்று இந்திய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் வழங்கிய செவ்வியிலேயே மஹிந்த ராஜபக்ச இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவும் இலங்கைக்கு அதன்போது உதவியது. இதனை அப்போது பிரசித்தப்படுத்த அவசியமிருக்கவில்லை.இந்த நிலையில் இந்தியாவின் உதவியின்றி இலங்கைக்கு அந்த போரில் வெற்றிப்பெற்றிருக்க முடியாது.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் உருவாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன்போது இந்தியாவுடன் இணைந்து இலங்கை செயற்படுகிறது.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இந்திய புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் இலங்கையின் முன்னைய அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளவில்லை. இதன் காரணமாக அந்த கசப்பான தாக்குதல்கள் இடம்பெற்றன என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வி - பாகிஸ்தானின் கடற்படை தளபதி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்தமை தொடர்பான கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,

இலங்கை எப்போதும் இந்தியாவின் உள்ளக பிரச்சினைகளில் தலையிடுவதில்லை.எனினும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.இந்தியா என்றும் இலங்கையின் உறவினன். ஏனைய நாடுகள் நண்பர்கள்.

கேள்வி - கோட்டாபய ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்காக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட மாகாணசபை திட்டத்தை ரத்துச்செய்யப்போகிறாரா?

பதில் - மாகாணசபை முறையை தாம் மேலும் பலப்படுத்தப்போகின்றது.

வடக்குகிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் மாகாணசபைகள் செயற்படவேண்டும்.எனினும் இதுவரை அது நடக்கவில்லை.

அந்த மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கான நிதிகள் வழங்கப்பட்டன.எனினும் அதனை அவர்கள் திருப்பியனுப்பியுள்ளனர். எனவே மத்திய அரசாங்கமே அபிவிருத்தியை செய்ய வேண்டியுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்கள் எப்போதும் அதிகாரப்பரவலாக்கம் மற்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சீனாவை பொறுத்தவரை அது இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

எனினும் இலங்கையின் கடந்த அரசாங்கம் பாரிய கடன்களை பெற்று அதற்காக சீனாவுக்கு 99 வருடங்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியுள்ளது.

எனினும் இந்த பிரச்சினையை தீர்க்க சீனாவுடன் பேசி வருவதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

கேள்வி - அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடுமா?

இதனை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை பௌத்தராக இருந்தாலும் தாம் எப்போதும் விஷ்ணு கடவுளை நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...