சிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதே எமது கட்சியின் நோக்கம்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

சிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நோக்கமாகும். தங்களது கட்சி சிறுபான்மைச் சமூகங்களை திருப்திப்படுத்தக்கூடிய ஆளுங்கட்சி,எதிர் கட்சி எதுவாக இருந்தாலும் சரி அதனுடன் இணைந்தே பயணிப்போம் என தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் எம்.எம்.முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைக் காரியாலயமான முள்ளிப்பொத்தானை "முள்ளி வில்லாவில்" இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலினை குறித்த கட்சியானது எதிர்நோக்கவுள்ளது. இது கன்னித் தேர்தலாக இருந்தாலும் கட்சி ஆதரவாளர்கள் உயர் பீடங்களை சேர்ந்தோர்கள்.

கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குகிறார்கள். எங்களுடன் ஏனைய தேசியக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளன. நடாத்தியும் வருகின்றன.

இரு பிரதான ஆளுங்கட்சி எதிர் கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. இதனது முடிவுகளை அடுத்து எமது கட்சி எந்தப்பக்கம் சார்ந்திருக்கும் என்பதையும் எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கக் கூடியதுமான தீர்மானமொன்றை எடுப்போம்.

உரிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு கட்சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சிறுபான்மை இனத்தின் 85 வீதமான கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். மக்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் இதை பொறுத்து அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.

அண்மையில் அநுராதபுரத்தில் சந்திப்பொன்று நடாத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட ஏனைய பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம்.

இந்த கட்சி சிறிய கட்சியாக இருந்தாலும் எதிர்கால அரசியலில் அதன் நகர்வுகளை உச்ச கட்டமாக அனுகூலமான முடிவுகளுடன் தான் பயணிப்போம்.குறிப்பாக தமிழ்,முஸ்லிம் மக்களுடைய அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய கோரிக்கைகளை கையளிப்போம்.

இது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...