மஹிந்தவுடன் இந்தியாவுக்கு சென்ற சர்ச்சைக்குரிய நபர்! சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

இந்தியாவுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர், தன்னுடன் அழைத்துச் சென்ற தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இடம்பெற்றிருப்பது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிரசன்ன ரணவீர, மகிந்த தலைமையிலான 52 நாள் அரசாங்கத்தின் காலத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய் தூள் கலந்த தண்ணீரை வீசி தாக்குதல் நடத்தியிருந்தார்.

பிரதமர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தில் குறிப்பிட்ட சிலரை மாத்திரமே தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

Latest Offers

loading...