அஜித் பிரசன்ன சிறைச்சாலை வைத்தியசாலையில் வேறு விடுதிக்கு மாற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாய் நாட்டுக்கான போர் வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன, வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் வேறு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அஜித் பிரசன்ன சிகிச்சை பெற்று வந்த விடுதியில் சுமார் 30 கைதிகள் தங்கி சிகிச்சை பெறுவதுடன் அஜித் பிரசன்ன விசேட இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

விசேட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரசன்ன வெலிகடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அஜித் பிரசன்ன எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.