இந்தியாவின் வரலாற்றை மாற்றிய பிரசன்ன ரணவீர! ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் பேரனாம்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இந்தியாவின் வரலாற்றை கூட மாற்றும் விதமான பதிவு ஒன்றை தனது பேஸ்புக்கில் இட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ராஜ்கோட்டில் நடந்த மகாத்மா காந்தியின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தனர்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள பிரசன்ன ரணவீர, மகாத்மா காந்தி நினைவு நிகழ்வில் காந்தியின் பேரனான ராகுல் காந்தியை சந்தித்ததாக கூறியுள்ளார்.

எனினும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. மகாத்மா காந்தியும், நேருவும் உறவினர்கள் அல்ல.

நேருவின் புதல்வியான இந்திரா, பெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தார். இதனடிப்படையிலேயே இந்திரா குடும்பத்தினருக்கு காந்தி என்ற பெயர் உருவானது.

இந்திராவின் புதல்வரான ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தி ஆவார். மகாத்மா காந்தி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.