பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Report Print Ajith Ajith in அரசியல்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கான வயது எல்லையை 45ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக இந்த பட்டதாரி விண்ணப்பதாரிகளுக்கான வயது எல்லையை 35 என்று அரசாங்கம் வரையறுத்திருந்தது.

எனினும் தற்போது அதனை 45 வயது என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த விண்ணப்பங்களை அனுப்பும் திகதி பெப்ரவரி 14 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.