முஸ்லிம் காங்கிரஸே திருகோணமலையில் அபிவிருத்தியை முன்னெடுத்தது: எம்.எஸ்.தௌபீக்

Report Print Mubarak in அரசியல்

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தின் வருகையின் பின்னரே பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்

தம்பலாகாமம் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் 1948ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவக்கப்பட்ட 1989ஆம் ஆண்டு வரையான 41 வருடங்களாக முஸ்லிம் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சிக்குமே வாக்களித்துள்ளனர்.

அவ்வாறு தொடர்ச்சியாக வாக்களித்து வந்துள்ள போதிலும் அப்போதய ஆட்சியளர்கள் முஸ்லிம்களுக்காக செய்த காத்திரமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என எதுவுமில்லை.

இலங்கை அரசியலைப் பொருத்தவரையில் 1994 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்களே ஜனாதிபதியாக இருந்துள்ளனர்.

ஆனால் தற்போதுதான் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்ததுபோல் பிரம்மைகளை உருவாக்கி வாக்கு சரிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

எமது முஸ்லிம்களின்அரசியல் வரலாற்றைப் பொருத்தவரரையில் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின் அரசியல் பிரவேசத்தின் பின்னரே பெரும் அபிவிருத்திகளை அடைந்துள்ளனர்.

அதாவது "வராயா" எனும் சொல்லைக்கூட கேள்விப்பட்டதும், அதன் வேலைவாய்ப்புக்களும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என கூறிக்கொண்டே செல்ல முடியும்.

மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் எண்ணத்தில் உதித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது எம்மைப் பொறுத்தவரை சாதாரணமான விடயமாக கருதமுடியாது.

இதன் வரலாறு பெரும் கனதியானது. எமது முன்னோர்களின் ஒற்றுமையாலும், விட்டுக்கொடுப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் இது விருட்சமாக வளர்ந்துள்ளது.

இன்னும் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரைலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தின் வருகையின் பின்னரே பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளோம்.

வீதி அபிவிருத்திகள், பாலங்கள், பல்கலைக்கழக கல்லூரி, மகாவலி அபிவிருத்தித் திட்டம் என பல உள்ளன என கூறியுள்ளார்.

Latest Offers