புதிய அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைக்கும் நாவிதன்வெளி பிரதேச சபை

Report Print Varunan in அரசியல்

புதிய அரசாங்கம் நாவிதன்வெளி பிரதேச மக்களது அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், வீதி அபிவிருத்தி போன்ற குறைப்பாடுகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி ஏகமானதான தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் காணப்படும் பிரதான குறைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் உறுப்பினர்களால் பேசப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த பிரதேசத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவிலும் அத்தியாவசிய குடிநீர்த் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து புதிதாக பதவியேற்றிருக்கும் அரசாங்கம் நாவிதன்வெளி பிரதேச மக்களது அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், வீதி அபிவிருத்தி போன்ற குறைபாடுகளை விரைந்து பெற்று தர ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சபை உறுப்பினர்களின் ஏகமானதான தீர்மானத்தையும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உறுப்பினர்களது ஆலோசனைகளும் முன்மொழியப்பட்டு தரப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.