எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் பிரதமர்! எச்சரிக்கும் சி.வி.விக்னேஸ்வரன் :பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது.

ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்.