கோட்டாபய விடுத்த பணிப்புரை! 20 ஆயிரம் அரச ஊழியர்கள் முன்வைத்த முறைப்பாடுகள்

Report Print Vethu Vethu in அரசியல்

அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இதுபற்றி விசாரிக்கும் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

கொழும்பு 02, பார்க் வீதியில் அமைந்துள்ள, இலக்கம் 23, பார்க்லன்ட் கட்டடத்தின் 19ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு தபால் மூலம் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டோருக்கு, சமகால அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான கண்டறியும் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers