இலங்கையுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்! இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி

Report Print Murali Murali in அரசியல்

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்நாட்டு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியா-இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

வரிஏய்ப்பை தடுக்கும் நோக்கத்தில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

3 பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபா மூலதனமாக வழங்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் உரிய வரியை செலுத்தி, வட்டி தள்ளுபடி மற்றும் அபராத தள்ளுபடி சலுகையை பெறும் திட்டம், மத்திய வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை அனுமதி அளித்தது.

கடன் வசூல் தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த திருத்தம் செய்யப்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.

Latest Offers