நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளை நிறுத்தும் அதிகாரமில்லை! சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in அரசியல்

குற்றவியல் விசாரணை திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு என்பன நடத்திய விசாரணைகள் பாராபட்சமான விதத்தில் நடத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வரை அந்த வழக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரம் தனக்கில்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவுக்கு நேற்று அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை ஒன்றை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே நிறுத்த முடியும் எனவும் அது நிறைவேற்று அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட காரியம் எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் இருக்கும் சம்பவம் ஒன்று தொடர்பாக தடையுத்தரவை பிறப்பிக்கவோ அல்லது சட்டமா அதிபருக்கு உத்தரவிடவோ ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லை எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களம், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேட விசாரணை பிரிவு என்பன நடத்திய விசாரணைகள் பாராபட்சமான முறையில் நடத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வரை அவை தொடர்பாக நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி பதில் பொலிஸ் மா அதிபர் கடந்த 3ஆம் திகதி, சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Latest Offers