கொழும்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னணியிலுள்ள மர்மங்கள்!

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பை மையமாக கொண்டு அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் உள்ள திட்டமிட்ட அரசியல் சக்தி மற்றும் அவர்களின் நோக்கம் தொடர்பான சகல தகவல்களும் அடங்கிய அறிக்கையை புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் வழங்கியுள்ளனர்.

நாட்டை நிலை குலைக்க இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளதை அடுத்து, ஸ்கொட்லாந்து பொலிஸாரிடம் விசேட பயிற்சிகளை பெற்ற 50 பேர் கொண்ட பொலிஸ் குழு நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பிரித்தானிய அரசின் உதவியுடன் பயிற்சி பெற்ற பொலிஸ் அணி இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து இந்த வாரம் வரை கொழும்பு நகரில் 41 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் வெளிநாடு ஒன்றின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் அரசியல் சக்தி மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசியல் பலத்தை பிடிக்கும் நோக்கில் செயற்படும் அமைப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரித்தானிய அரசாங்கம், இலங்கையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர், இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட விசேட பொலிஸ் குழுவிற்கு ஸ்கொட்லாந்து மற்றும் களுத்துறை பொலிஸ் பயிற்சி பாடசாலை ஆகியவற்றில் பயிற்சிகளை வழங்கியது.

எனினும் பயிற்சி பெற்ற இந்த பொலிஸ் குழுவை கடந்த அரசாங்கம் பயன்படுத்தவில்லை என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

எது எப்படி இருந்த போது நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற காலத்தில் இருந்து கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்ங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தன. புதிய அரசாங்கம் பதவிக்கு வரும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் நடந்து வந்தன.

அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அவ்வப்போது பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது. எனினும் கடந்த மூன்று மாதங்களாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவ்வாறான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers