ஒற்றுமை சீர்குலைந்தால் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது! டியூ. குணசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

விருப்பு வாக்குகளை பெற போட்டியிட்டு, ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் என அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

விருப்பு வாக்குகளை பெற போட்டியிட்டு, ஒற்றுமை இல்லாமல் போனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூடிய பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போகும்.

அனைத்தையும் தீர்த்துக்கொள்ள தலைமைத்துவம் ஒன்றுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட கூட்டணியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துவது முக்கியமானது.

விருப்பு வாக்குகளை பெற போட்டியிட்டு, ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் என அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.

பிரச்சினைகளை தீர்க்க கட்சி தலைவர்களுக்கு இடமளித்து விட்டு ஏனையோர் ஒதுங்கி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers