ரஞ்சனின் குரல் பதிவுகளால் தயாசிறி சிக்கலில்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வழங்கியுள்ள குரல் பதிவுகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ரஞ்சன் ராமநாயக்க வழங்கிய குரல் பதிவுகளில் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவும் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த குரல் பதிவு பழைய தொலைபேசி உரையாடல் எனவும் அது தற்போதைய காலத்திற்கு உரியதல்ல என்பதால், அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் என தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers