ஜனாதிபதிக்காக தியாகங்களை செய்ய தயார் - மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

ஊழல், மோசடிக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவு கிடைக்கும் என அந்த முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமமை தொடர்பாக பல நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை ஊடகங்களில் காண்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க கூடியளவில் முயற்சித்து வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தில் ஆதரவளித்து வெற்றி பெற்ற ஜனாதிபதியின் பலத்தை மேலும் வலுப்படுத்தவே எமது கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவை வழங்கும். அது மாத்திரமல்ல ஜனாதிபதியை பாதுகாத்துக்கொள்வதற்காக முடிந்த அனைத்து தியாகங்களையும் செய்ய தயார் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers