சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு தரப்புக்கும் அச்சம் உள்ளது: ஜனாதிபதி சட்டத்தரணி

Report Print Steephen Steephen in அரசியல்

இனங்களுக்கு இடையில் இடைவெளியை உருவாக்குவதற்கு பதிலாக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பாலத்தை நிர்மாணிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.

மருதானை சாஹிரா கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனங்களுக்கு இடையில் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டுமாயின் வெளிப்படையாக ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் உள்ளது. பெரிய அச்சம் இருக்கின்றது.

எந்த நேரத்தில் எமக்கு பிரச்சினை வருமோ என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினை. எந்த நேரத்தில் குண்டுகள் வெடிக்குமோ என்று சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.

இரண்டு தரப்புக்கும் அச்சம் உள்ளது. ஒன்றாக இணைந்து பேசினால், நாட்டில் யாரும் எவருக்கு எதிராகவும் சூழ்ச்சிகளை செய்வதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

அமைதியும் நாட்டின் அபிவிருத்தியுமே அனைவருக்கும் தேவை எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers