கல்வி தகுதி உட்பட ஏனைய தகுதிகள் கொண்டவர்களுக்கே வேட்புமனு: பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை வழங்கும் போது மக்கள் ஆதரவு மற்றும் பிரபலம் என்பவற்றை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது அவர்களின் கல்வி தகுதி உட்பட ஏனைய தகுதிகளை கவனத்தில் கொண்டு வேட்புமனுக்களை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்ய முடியாத நபர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குவதில்லை எனவும் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கை உள்ளவர்களுக்கு அதிகளவில் வேட்புமனுக்களை வழங்குவது குறித்து அந்த கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் பொலித்தீன், சுவரொட்டிகள், கட்அவுட் ஆகியன இன்றி, சுற்றாடலுக்கு ஏற்ற மற்றும் எதிரணி வேட்பாளர்களுக்கு சேறுபூசும் விமர்சனங்களை முன்வைக்காது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள பொதுஜன பெரமுன ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers