மகிந்தவின் இந்திய விஜயத்தின் போது அரசாங்க நிதி பயன்படுத்தவில்லை!

Report Print Ajith Ajith in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தின்போது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க நிதியை பயன்படுத்தவில்லை.

அவர்கள் தமது சொந்த பணத்தையே பயன்படுத்தினர் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விமான அனுமதிச்சீட்டுக்கள் மற்றும் தங்குமிட வசதிகள் என்பவற்றுக்கு அவர்கள் தமது சொந்த பணத்தையே செலவிட்டனர் என்று பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் சென்ற அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கான செலவை யார்? வழங்கினார்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அமைச்சர் பந்துல இதனைக்குறிப்பிட்டார்