100,000 டொலர் அமெரிக்க வங்கி ஒன்றில் வைப்பு! ரிசாத் பதியுதீன் மீது முறைப்பாடு

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இன்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளார்.

பொலிஸ்மா மா அதிபரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பண பரிமாற்றம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஒக்டோபர் 26க்கும் டிசம்பர் 16ம் திகதிக்கும் இடையிலான பகுதியில் வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதீன் அமெரிக்க வங்கி ஒன்றுக்கு 100,000 டொலர்களை வைப்பு செய்துள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் விமல் வீரவன்சவினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் ரிசாத் பதியுதீன் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Offers