சஜித்தின் தனிவழிப் பயணம் சிறந்ததல்ல - கோட்டாபயவுடன் இணையவும் விடோம்...

Report Print Rakesh in அரசியல்

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் பிறிதொரு கட்சியை ஆரம்பிப்பது தலைமைத்துவப் பண்புக்குப் பொறுத்தமானதாக இருக்காது."

இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பான முரண்பாடுகளால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தற்போதுள்ள நிலவரத்தை நோக்கும்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. இரு குழுக்களாகப் பிரிந்தே போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சஜித் பிரேமதாச பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட தயார் என்று சஜித் தரப்பு கூறிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இணங்காது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers