பொதுத்தேர்தலுக்குத் தயாராகுங்கள்! ரணில் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்துத் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களை வலுப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிறிகொத்தவில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் முன்னணி உள்ளிட்டோருடனும் எதிர்வரும் நாட்களில் சிறிகொத்தவில் சந்திப்புக்கள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.