அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இராஜாங்க அமைச்சர் எதிர்ப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கத்தின் நிலைப்பாடு ஒன்று தொடர்பில் மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்

நீர்கொழும்பில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அண்மையில் இராஜாங்க அமைச்சருக்கும் வனத்துறை அதிகாரியான தேவனி ஜயதிலக்கவுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இதன்போது தேவனியின் கருத்து சரியானது என்ற அடிப்படையில் சமூக ஊடகங்கள் அவருக்கு முன்னிலையை வழங்கின.

அதேநேரம் இன்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவும் தேவனிக்கு ஆதரவாக தமது கருத்தை வெளியிட்டார்.

அத்துடன் கோட்டாபயவின் அரசாங்கமும் அவருக்கு துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடொல்கெல பகுதியில் மைதானம் அமைக்கும் திட்டத்தை தாம் முன்னெடுக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த குறிப்பிட்டுள்ளார்

கம்பாஹா வனத்துறை அதிகாரி எதிர்ப்பை வெளியிட்டபோதும் இந்த திட்டத்தை மக்களுக்காக தாம் முன்னெடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது பயன்தரு மரங்களுக்கு பாதிப்பில்லாமல் மக்கள் நலன்திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

1000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் நீர்கொழும்பு வாவி, மைதானம், வீதிகள், பாலங்கள் மற்றும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வனத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமை காரணமாக இது 2014ம் ஆண்டில் இருந்து தாமதிக்கப்பட்டு வருகின்றன. எனவே அதனை முன்னெடுக்கவேண்டிய அவசியம் உள்ளது.

தமது தரப்பு நியாயத்தை கூறி கம்பஹா வனத்துறை அதிகாரி தப்பிக்கொண்டார். எனினும் தாமே நீர்கொழும்பு மக்களுடன் இருந்து சேவையாற்றுபவன். எனவே தாம் அந்த திட்டத்தை முன்னெடுக்கவேண்டியுள்ளது.

பெண் அதிகாரியின் காணொளி வெளியான பின்னர் பிரதேச மக்கள் அவரிடம் குறித்த அபிவிருத்தி திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடவேண்டாம் என்று கோரியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Latest Offers