சஜித்திற்கு சுதந்திர கட்சி ஆதரவளிக்க வேண்டும்! ஐ.தே.க உறுப்பினர் கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா கோரியுள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தலின்போது சஜித்துக்கு ஆதரவளிக்காமல் தவறுசெய்துவிட்டது.

அந்த தவறை பொதுத்தேர்தலில் அது திருத்திக்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின்போது, பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு 30 வீத ஆசன ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உறுதியளிக்கப்பட்டது.

எனினும் தற்போது அது கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுத்தேர்தலில் சஜித் தரப்புக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்றும் ராஜகருணா தெரிவித்தார்

Latest Offers