அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான குற்றச்சாட்டு!

Report Print Rakesh in அரசியல்

“அரசமைப்பின் 19வது திருத்தத்தின் ஊடாக நாட்டில் மக்களாட்சியை - நல்லாட்சியை உருவாக்கியிருந்தோம். எனினும், தற்போதைய அரசு அதனை இல்லாதொழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன், மக்களுக்கான நிவாரணங்களையும் இல்லாதொழித்து வருகின்றது." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“மஹிந்த ராஜபக்சவின் கடந்த கால அரசில் அரச ஊழியர்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் மீளவும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

அத்துடன், அரசமைப்பின் 19வது திருத்தத்தின் வாயிலாக எமது அரசு பெற்றுக்கொடுத்த சுயாதீனத் தன்மையை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளையே இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.

சுயாதீனத்தன்மையை இல்லாதொழிப்பதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

எமது ஆட்சிக்காலத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வை இந்த அரசு இரத்துச் செய்துள்ளதுடன், ஓய்வூதிய அதிகரிப்பை இல்லாதொழித்துள்ளது.

அத்துடன், பொருட்களின் விலை மூன்று மடங்கினால் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களுடைய வாழ்க்ககைச் செலவு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மக்களுக்குச் சலுகைகளை வழங்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு கர்ப்பிணித் தாய்மாருக்கான போசனை உணவுத்திட்டத்தை இரத்துச் செய்துள்ளதுடன், பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியையும் குறைத்துள்ளது.

விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறிய உரமானியத்தையேனும் இந்த அரசால் வழங்க முடியவில்லை. அதேவேளை, பணம் செலுத்தியேனும் உரத்தைக் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. இருப்பினும், அதன் பலாபலன்களை இந்த அரசால் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

எமது ஆட்சிக்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பை மையமாகக் கொண்டுஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். முக்கியமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் ஆர்ப்பாட்டங்களை.

இந்தநிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சங்கங்கள் எதற்காக மௌனம் காக்கின்றன?' என்று கேள்வி எழுப்பினர்.

Latest Offers