ஒவ்வொருவருக்கும் தலா 25 இலட்சம் ரூபா நிதி வழங்கும் ரணில்!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் சமகால நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா 25 இலட்சம் ரூபா பணம் வழங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

எதிர்கால நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இந்த பணம் வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் அகில விரோஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.


you may like this video