அமைச்சர்கள் பயன்படுத்தவில்லையாயின் வாகனங்களுக்கு என்ன நடந்தது?

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னைய நல்லாட்சி அரசாங்கம் கொள்வனவு செய்ததாக கூறப்படும் 78 வாகனங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது.

இந்த கொள்வனவுக்காக 1.6 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அண்மையில் நாடாளுமன்றில் வைத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இது தொடர்பில் விசாரணை தேவை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார்.

குறித்த வாகனங்கள் எதனையும் தாம் பயன்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர்கள் இந்த வாகனங்களை பயன்படுத்தவில்லை எனில் இந்த வாகனங்களுக்கு என்ன நடந்தது என்று ஜெயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.