சின்னம் தொடர்பான தீர்வு தொடர்பில் சஜித் தலைமையில் மற்றுமொரு சந்திப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் எழுந்துள்ள சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையில் இன்று மற்றுமொரு சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள்,ஆகியோரை பிரதி தலைவரும் ஐக்கிய தேசிய சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.

நாடாளுமன்றக்குழுவை இன்று முற்பகல் சந்திக்கும் சஜித் பிற்பகலில் தொகுதி அமைப்பாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று எட்டப்படும் முடிவுகளுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுசெயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.