ரணில் - சஜித் கூட்டை தொடர்ந்தும் தக்கவைக்க முயற்சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

ரணில் - சஜித் கூட்டை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் இருவருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யானை சின்னத்தை வழங்கி அதில் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த கூட்டை பொதுத்தேர்தலில் போட்டியிடச் செய்யலாம் என்பதே மங்களவினதும் மலிக்கினதும் எண்ணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மறுபுறத்தில் இதயம் சின்னத்தில் போட்டியிட தயாரில்லை என்று ரணில் தரப்பு தெரிவித்து விட்டமையால், யானையை சஜித்தின் ஐக்கிய தேசிய சக்தி முன்னணிக்கு விட்டுக்கொடுக்கலாம் என்பதே தற்போதுள்ள கோரிக்கையாக இருக்கிறது.

இதனை புதிய கட்சி தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் மேற்கொள்ளலாம் என்பதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது.

இதனை சஜித்தின் தரப்பில் இருந்து ஐக்கிய தேசிய சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அகில விராஜ் காரியவசம் ஆகியோர் மேற்கொள்ள அதிகாரம் உள்ளது.

இதேவேளை யானையை கோராமல் இதயம் சின்னத்திலேயே போட்டியிடலாம் என்று சஜித்துக்கு ஆதரவு வழங்கும் ஏனைய சிறிய கூட்டுக்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.