மக்கள் நிராகரித்த எவரையும் பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்ள மாட்டோம் - பிரதமர் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

பொது மக்கள் நிராகரித்துள்ள சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை எந்த வகையிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய தயாராகி வருவதாக பரவி வரும் வதந்தி சம்பந்தமாக சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் குறுகிய காலத்தில் நாட்டின் பிரபலமான அரசியல் கட்சியாக மாறியுள்ளது.

இதனால், கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள பல்வேறு நபர்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.