அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த பெண் அரச ஊழியர்! பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

வன பாதுகாப்பு அதிகாரியான தேவானி ஜயதிலக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமை கேந்திர நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீர்கொழும்பு கண்டல் மர காட்டை பாதுகாக்க நேரடியாக தனது எதிர்ப்பை காட்டியதால், அந்த பெண் அதிகாரிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து இருப்பதாக மனித உரிமை கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த அதிகாரியின் தொழில் பாதுகாப்பு மற்றும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான பின்னர் நேற்று முன்தினம் மாலை அது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, “ அந்த அதிகாரி நூலிழையில் தப்பினார். நான் காப்பாற்றாவிட்டால் அவரை தாக்கியிருப்பார்கள்” என கூறியதாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜாங்க அமைச்சரின் இந்த கருத்து வன பாதுகாப்பு அதிகாரி தேவானி ஜயதிலக்கவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தல் என சுரங்கி ஆரியவங்ச சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான தேவானி ஜயதிலக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு.

இது சம்பந்தமான ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் மனித உரிமை கேந்திர நிலையம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த சம்பவம் காரணமாக தேவானியின் தொழில் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறும் அந்த கடித்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சுரங்கி ஆரியவங்ச குறிப்பிட்டுள்ளார்.