நம்பிக்கையானவர்களே தன்னை அழைத்துச் சென்றனர்! காரணத்தை கூறும் பிரசன்ன ரணவீர

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இந்திய விஜயத்தின் போது அத்தியாவசியமான மற்றும் நம்பிக்கையானவர்களே தன்னுடன் அழைத்துச் சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்று குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே தான் பிரதமருடனான இந்திய விஜயத்தில் இணைந்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக தான் இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், பிரதமரின் இந்திய விஜயத்தின் போது என்றுமில்லாத வகையிலான வரவேற்பு இருந்ததாகவும், இந்த விஜயத்தினால் நாட்டுக்கு அதிகளவான பிரதிபலன்கள் கிடைத்ததாகவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.