கினி பிசாவ் நாட்டின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Report Print Steephen Steephen in அரசியல்

கினி பிசாவ் நாட்டின் ஜனாதிபதி Umaro Cissoko Embalo இன்று இலங்கைக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் இருந்து குவைத் நோக்கி செல்லும் வழியில் அரசாங்கத்திற்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் தரையிறங்கியுள்ளனர்.

இவர்களை வரவேற்பதற்காக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விமான நிலையத்தின் முக்கிய அதிதிகள் வரும் முனையத்திற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் குவைத் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கினி பிசாவ் நாடு ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதுடன், இந்த நாடு கினியா, செனகல் மற்றும் த கம்பியா நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ளது.